Friday, January 22, 2010

வருக வருக ... அபிராமம் வலைத்தளம்...!



"சின்ன ரங்கூன்" என்று அழைக்கப்பட்ட அபிராமம் மா நகரின் வரலாறு...!


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதஹு...!

எங்களுடைய ஊர் மதுரை - கமுதி வழியில் ..., கமுதிக்கு ஒன்பது கிலோ மீட்டர்க்கு முன்னாள் அமைந்து இருக்கிறது. அழகிய வின் உயர் இரண்டு மினராக்கள் கம்பீரமாக முதலில் நம்மை வரவேற்கும்.
பஸ் நிலையத்தில் லிருந்து , கிழக்கு நோக்கி உள்ளே செல்லும் முதல் வளைவில் - நைனா முஹம்மது ஒலியுல்லா தர்கா அமைந்து இருக்கிறது. அதை தாண்டி 250 மீ உள்ளே சென்றால், வடக்கு பக்கம் பழங்காலத்து சுப்பிரமணி கோவிலும் , தெற்கே - ஒரு கோவிலும் அமைந்து உள்ளது .
அதைத்தாண்டி கிழக்கு நோக்கி உள்ளே சென்றால், நம்மை முதலில் வரவேற்ற அந்த மினாராக்களை தாங்கி நிற்கின்ற பெரிய பள்ளிவாசல் மீண்டும் நம்மை வரவேற்கிறது. இந்த பள்ளிவாசல் நூறு வருசத்தை விழுங்கி மிடுக்கோடு நிமிர்ந்து நிற்கிறது.